மகாகவி பாரதியார் திருவுருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர். 
தமிழ்நாடு

தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த தின விழா

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

DIN


கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தமிழ்நாடு காங்கிரஸ் இளைஞரணி சார்பில் மகாகவி பாரதியாரின் 139 ஆவது பிறந்த தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் சுப்பிரமணியம், கோவில்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சண்முகராஜ், மகாத்மா காந்தி நினைவு அறக்கட்டளை தலைவர் திருப்பதிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, பாரதியாரின் உருவப்படத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், தமிழ்நாடு காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் நாஞ்சில் ராஜேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் துணைத் தலைவர் சண்முகராஜ், மாவட்ட ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராஜு, காங்கிரஸ் கமிட்டியின் மாவட்டச் செயலர்கள் சுப்புராயலு, முத்து, சிவப்பிரகாசம், தகவல் அறியும் உரிமை துறை மாவட்டத் தலைவர் ராஜசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், மகேஷ்குமார், உமாசங்கர் ஆகியோர் பேசினர்.

நிகழ்வில், காங்கிரஸ் கட்சி கடம்பூர் நகரத் தலைவர் ஜெகதீசன், வட்டாரத் தலைவர்கள் அருள்ராஜ் (கயத்தாறு), கந்தசாமி (கழுகுமலை), வர்த்தக அணி மாவட்டத் தலைவர் ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் செல்வராஜ் பாண்டி வரவேற்றார். காங்கிரஸ் இலக்கிய அணி மாநிலச் செயலர் முத்து நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த சாதனையைச் செய்தது சாய் பல்லவிதான்!

யுபிஎஸ்சி தேர்வுக்கான கட்டணம் எவ்வளவு? அனைவருக்கும் கட்டணமா?

தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடி

இபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்டிரைக்! முதல்வர் ஸ்டாலின்

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

SCROLL FOR NEXT