துறையூர் அருகே வெங்காயப் பயிர் சேதம்: இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
துறையூர் அருகே வெங்காயம் பயிர் செய்திருந்த விவசாயிகள் இழப்பீடு கோரி ஞாயிற்றுக்கிழமை அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுதுறையூர் அருகே வெங்காயப் பயிர் சேதம்: இழப்பீடு கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
துறையூர் அருகே வெங்காயம் பயிர் செய்திருந்த விவசாயிகள் இழப்பீடு கோரி ஞாயிற்றுக்கிழமை அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர்: துறையூர் அருகே வெங்காயம் பயிர் செய்திருந்த விவசாயிகள் இழப்பீடு கோரி ஞாயிற்றுக்கிழமை அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
துறையூர் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் நிகழாண்டில் சுமார் 3443 ஏக்கரில் வெங்காயம் பயிர் சாகுபடி செய்திருந்தனர். நிகழாண்டில் பெய்த மழையால் இந்த பகுதியில் நிலவிய ஈரப்பதத்தில் வெங்காயப் பயிரை தாக்கும் பூஞ்சான் வகையைச் சேர்ந்த திருகல் நோய் பரவியதாலும், வயலில் தேங்கிய அதிகப்படியான மழை நீராலும் வெங்காயப் பயிர்கள் வயிலிலேயே முற்றிலும் அழுகி விவசாயிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியது.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் செல்லிப்பாளையம் ஈச்ச மரம் பேருந்து நிறுத்தம் அருகே விவசாயிகள் அரசின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
விளைநிலத்தில் சேதமான வெங்காயம் பயிர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு செல்லிப்பாளையம் விவசாயி என். மனோகரன் தலைமை வகித்தார். வனத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற சின்னசாமி, ஆர். ரெங்கராஜ், ரெங்கநாதபுரத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி சீனிவாசன், மருவத்தூர் பாலகுரு உள்ளிட்ட விவசாயிகள் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் போது பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையாக இழப்பீடு வழங்கவேண்டும். உடனடி இழப்பீடாக ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 வழங்கவேண்டும். வெங்காயப் பயிரைத் தாக்கும் திருகல் நோயிலிருந்து பயிரை பாதுகாக்க பூஞ்சானக் கொல்லி மருந்தை தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் மூலம் கண்டறிந்து விவசாயிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.
20 ஆண்டுகளாக பயன்பாட்டிலிருக்கும் விதை ரகத்தை மேம்படுத்தவேண்டும். திருகல் நோய்க்கு எதிராக வீரிய விதையை போர்க்கால அடிப்படையில் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.
அரசின் மானியம் மட்டும் வழங்குவதற்கு தோட்டக்கலைத் துறையில் 10, 12 ஆம் வகுப்பு படித்த பணியாளர்களே போதும் என்றும், வேளாண் பட்டதாரிகள் நியமனம் எதற்கு என்றும் ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக விவசாயிகள் அரசுக்கு கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை விவசாயிகளை சந்தித்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலர் மு. பரஞ்சோதி.
இந்த ஆர்ப்பாட்டத்தில் செல்லிப்பாளையம், மருவத்தூர், அம்மம்பாளையம், து.ரெங்கநாதபுரம், நரசிங்கபுரம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.
சனிக்கிழமை இந்த பகுதிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி அதிமுக நிர்வாகிகள் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்களுடன் நேரில் சென்று நஷ்டமடைந்த விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு எழுதிக் கொடுத்தால் உரிய நடவடிக்கைக்காக முதல்வரின் கவனத்துக்கு எடுத்து செல்வதாகவும் தான் சந்தித்த விவசாயிகளிடம் கூறினார்.