முகப்பு
தமிழ்நாடு

சங்ககிரி அருகே தேவராயன் ஏரியில் 2 ஆவது வாரமாக களர் செடிகள் அகற்றும் பணி 

சங்ககிரி அருகே உள்ள தேவராயன் ஏரியில் சீமை கருவேல மரங்கள், களர்செடிகளை 2 ஆவது வாரமாக அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
சங்ககிரி அருகே உள்ள தேவராயன் ஏரியில் கருவேலம் மரங்கள், களர்செடிகள் அகற்றும் பணியில் 2வது வாரமாக ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டுள்ள பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள். 
பகிர்:

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள தேவராயன் ஏரியில் மழை நீரை சேமிக்க சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் உள்பட பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் ஏரியில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்கள், களர்செடிகளை 2 ஆவது வாரமாக அகற்றும் பணிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. 

சங்ககிரி,  ஈரோடு பிரிவு சாலை அருகே  உள்ள பழமை வாய்ந்த சுமார் 4 ஏக்கர் பரப்பரளவு கொண்ட தேவராயன் ஏரியில் மழைநீரை சேமிப்பதற்காக  வளர்ந்துள்ள சீமை கருவேலம் மரங்கள், தேவையற்ற களர் செடிகளை சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் ஏ.ஆனந்தகுமார் தலைமையில் நிர்வாகிகள் ராகவன், கணேஷ்,  பன்னீர்செல்வம்,  கதிர்வேல், வெங்கடேஷ்,  சங்ககிரி கோட்டை அரிமா சங்கத்தலைவர்  சக்திவேல், செயலர் ஜிஆர்.ரமேஷ், அன்னை சக்திவேல், வெங்கடாஜலம், செல்வரத்தினம், அரிமா சங்கத் தலைவர்  ஏஎஸ்டி கார்த்திக், அருண் சந்தர்  உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சீமை கருவேலம் மரங்கள், களர்செடிகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்டனர்.

ஏரியின்  பரப்பளவு அதிகமாக உள்ளதையடுத்து முழுமையாக களர்செடிகளை அகற்றும் வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இப்பணிகள் நடைபெற உள்ளதாக பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சேலம் மாவட்டம் சங்ககிரி பப்ளிக் சேரிடபிள் டிரஸ்ட் சார்பில் ஈரோடு பவானி பிரிவு ரோடு அருகில் அமைந்துள்ள தேவராயன் ஏரியில்  உள்ள சீமை கருவேல முள் மரங்கள் மற்றும் தேவையற்ற செடிகளை அகற்றும்

முழு கட்டுரையைப் படிக்க →