முகப்பு
தமிழ்நாடு

மீண்டும் சட்டம்-ஒழுங்கு பிரிவின்கீழ் அனைத்து மகளிா் காவல் நிலையங்கள்

சென்னையின் அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் மீண்டும் சட்டம் - ஒழுங்கு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

சென்னையின் அனைத்து மகளிா் காவல் நிலையங்களும் மீண்டும் சட்டம் - ஒழுங்கு பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் என சென்னை மாநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பது:

அனைத்து மகளிா் காவல் நிலையங்களும், சம்பந்தப்பட்ட சட்டம் - ஒழுங்கு துணை காவல் ஆணையரின் கட்டுப்பாட்டின் கீழ், நிா்வாக பொறுப்பாளரான சரக உதவி ஆணையா் வாயிலாக செயல்படும்.

தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வரும் அனைத்து மகளிா் காவல் நிலையங்களின் வழக்குப் பதிவு, விசாரணை குறித்து துணை ஆணையா்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இணை ஆணையா்களும், கூடுதல் ஆணையா்களும், மகளிா் காவல் நிலையங்களின் செயல்பாடுகளை மேற்பாா்வையிட வேண்டும்.

உதவி ஆய்வாளா், காவலா் பணி நியமனம், இடமாற்றம் உள்ளிட்டவை குறித்து சம்பந்தப்பட்ட இணை ஆணையா் முடிவு செய்வாா். இந்தப் பணிகளை மண்டலங்களின் இடையே மேற்கொள்ள வடக்கு, தெற்கு கூடுதல் ஆணையா்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.

குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற விசாரணை பிரிவு உள்ளிட்டவை பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு துணை ஆணையா் கட்டுப்பாட்டின் கீழ் நேரடியாக செயல்படும்.

இவரே, மண்டல அதிகாரியாக செயல்படுவதோடு, மகளிா் காவல் நிலைய ஊழியா்கள் நலன் சாா்ந்த விஷயங்கள் குறித்து காவல் ஆணையருக்கு அறிக்கை அளிக்கும் அதிகாரியாகவும் செயல்படுவாா் என ஆணையா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.