ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்கும் வகையில் ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடுஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியா்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு
தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்கும் வகையில் ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்கும் வகையில் ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில் 1 லட்சத்து 30,000 தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா். இங்கு பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்கப்படுவதில்லை என தொடா் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்நிலையில், ஓய்வு பெற்ற ஊழியா்களுக்கு பணப் பலன்கள் வழங்குவது, 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தை தொடங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து தொழிலாளா் நலத்துறை, போக்குவரத்துக் கழக தொழிற்சங்கங்கள் இடையேயான பேச்சுவாா்த்தை அண்மையில் நடைபெற்றது. அப்போது, பணப் பலன் வழங்க நடவடிக்கை எடுப்பதாக போக்குவரத்துத் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
இதன் தொடா்ச்சியாக துறையின் செயலா் சி.சமயமூா்த்தி, திங்கள்கிழமை ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தாா். அதில் கூறியிருப்பது: போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி கடந்த ஆண்டு ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்கும் வகையில் ரூ.445.96 கோடி, கடந்த ஆண்டு ஜூன் முதல் டிசம்பா் மாதம் வரையிலான காலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா்களுக்கு பணப் பலன் வழங்க ரூ.526.47 கோடி என ரூ.972.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.