திருவள்ளூர் அருகே வெவ்வேறு சாலை விபத்து: 2 பேர் பலி
திருவள்ளூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே வெவ்வேறு சாலை விபத்துக்களில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் நிலைய காவல்துறையினர் தரப்பில் கூறியதாவது.
திருவள்ளூர் அருகே காவல்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் உமாபதி(64). இவர் தனது மனைவி விஜயா(55) உடன் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தாராம். அப்போது, புட்லூர் முனீஸ்வரன் கோயில் அருகே வேகமாகச் சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தனர். இதில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் அடைந்தனர். அதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
அப்போது, அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர் விஜயா ஏற்கெனவே உயிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காயம் அடைந்த உமாபதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக உமாபதி மகன் பாஸ்கர் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதேபோல், திருவள்ளூர் அருகே லட்சுமிபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஞானசேகரன் மகன் ஹரிசங்கர்(21). இவர் திருமழிசையில் செயல்பட்டு தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமையும் வழக்கம் போல் பணிக்கு சென்று இரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாராம். புதுச்சத்திரம் அருகே வேகமாக வந்து கொண்டிருக்கும் போது வேகத்தடையில் எதிர்பாராமல் நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சைக்கு அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை அதிகாலையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வெள்ளவேடு காவல் நிலையத்தில் ஞானசேகரன் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.