விராலிமலை அருகே ஒருவர் அடித்துக் கொலை
விராலிமலை அருகேயுள்ள கடைக்கான் பட்டியில் கிணற்று மண்ணை அள்ளுவதில் பங்காளிகள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் கட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
விராலிமலை: விராலிமலை அருகேயுள்ள கடைக்கான் பட்டியில் கிணற்று மண்ணை அள்ளுவதில் பங்காளிகள் இருவருக்குள் ஏற்பட்ட மோதலில் கட்டையால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டார். விராலிமலை காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விராலிமலை அருகேயுள்ள தேன்கனியூர் கடைக்கான் பட்டியைச் சேர்ந்தவர் பழனிசாமி மகன் 44 வயதான மணிவேல். இவர் தனது வீட்டில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கிணற்று மேட்டில் சின்னாக்கவுண்டர் மகன் 60 வயதான சின்னையா மற்றும் மேற்படி நபரான பழனிசாமி ஆகிய இருவருக்கும் பொதுவான மண்ணை பழனிசாமி அள்ளியுள்ளார்.
இதனைக் கண்டித்து சின்னையா, பழனிசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றியதில் சின்னையா தன் கையில் வைத்திருத்த கட்டையால் பழனிசாமியை தலையில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பழனிசாமியை அருகில் இருந்தவர்கள் மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். இதில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
இதனைத் தொடர்ந்து விராலிமலை காவலர்கள் கொலை வழக்குப் பதிந்து சின்னையாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.