தென் கடலோர மாவட்டங்களில்மிதமான மழை பெய்யக்கூடும்
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.23) மிதமான மழை பெய்யக்கூடும்.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.23) மிதமான மழை பெய்யக்கூடும்.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியது: தென் மேற்கு வங்கக்கடலின் தென் பகுதி மற்றும் அதையொட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (டிச.23) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலை நிலவும்.
சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இரு நாள்களுக்கு மழை: தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு லேசான மழையும், வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வட வானிலையும் நிலவும் என்றாா் அவா்.
மீனவா்களுக்கு எச்சரிக்கை: லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்தக்காற்று வீசும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் புதன்கிழமை (டிச.23) வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.