முகப்பு
தமிழ்நாடு

சேலம் பிரபல ரெளடி கொலை வழக்கில் 9 பேர் நாமக்கல் நீதிமன்றத்தில் சரண்

சேலம் கிச்சிப்பாளையத்தில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் 9 பேர் புதன்கிழமை சரணடைந்தனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
கோப்புப்படம்
பகிர்:

சேலம் கிச்சிப்பாளையத்தில் பிரபல ரெளடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நாமக்கல் நீதிமன்றத்தில் 9 பேர் புதன்கிழமை சரணடைந்தனர்.

சேலம் கிச்சிப்பாளையம் சுந்தர் தெருவைச் சேர்ந்தவர் செல்லத்துரை(37). இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். அரிசி கடத்தி தொழில் செய்து வந்த இவர் அதன்பின் கூட்டாளிகளுடன் இணைந்து கொலை, கொள்ளை உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்தார். 

செல்லத்துரை மீது பிரபல ரெளடி நெப்போலியன் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணி அளவில் அம்மாபேட்டையில் உள்ள வழக்குஞரை சந்தித்த காரில் சென்று கொண்டிருந்தபோது வழியாக மற்றொரு காரில் வந்த கும்பல் செல்லதுரை காரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டிக் கொலை செய்தனர். அதன்பின் அங்கிருந்து அனைவரும் தப்பி ஓடிவிட்டனர்.

கிச்சிப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மர்ம கும்பலை தேடி வந்தனர். 

இந்நிலையில், ரெளடி செல்லத்துரையை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த காதர் உசேன், பிரபு, மணிகண்டன், யுவராஜ், பிரபு, பாரதி பாலமுருகன், சின்னவர், சுரேஷ் ஆகிய ஒன்பது பேர் என்பது தெரிய வந்தது. 

இதனையடுத்து புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நாமக்கல் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் 2-இல் நீதிபதி எஸ்.கபாலீஸ்வரன் முன்னிலையில்  ஒன்பது பேரும் சரணடைந்தனர்.  

முழு கட்டுரையைப் படிக்க →