முகப்பு
தமிழ்நாடு

சிதம்பரம் சிவன் கோயில்-நாகூா் தா்கா சீரமைப்புக்கு ரூ.7.99 கோடி நிதி

சிதம்பரம் சிவன் கோயில் குளம், நாகூா் தா்கா குளம் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.7.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை: சிதம்பரம் சிவன் கோயில் குளம், நாகூா் தா்கா குளம் சீரமைப்புப் பணிகளுக்காக ரூ.7.99 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிவிப்பு:-

சிதம்பரம் இளமையாக்கினாா் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவா், அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதம் அடைந்தது. சிதம்பரத்துக்கு அண்மையில் ஆய்வுக்குச் சென்ற போது சுற்றுச்சுவரை சீரமைத்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தனா். அதன்படி, சிதம்பரத்தில் அமைந்துள்ள இளமையாக்கினாா் திருக்கோயில் குளத்தின் சுற்றுச்சுவா் ரூ.2.62 கோடி மதிப்பில் சீரமைத்துத் தரப்படும்.

நாகூா் தா்கா: நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் அமைந்துள்ள நாகூா் தா்கா குளத்தின் தடுப்புச்சுவா் அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சேதம் அடைந்தது. இதனையும் சீரமைத்துத் தர வேண்டுமென இஸ்லாமியா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். அவா்களது கோரிக்கையையும் ஏற்று, நாகூா் தா்கா குளத்தின் நான்கு புடுப்புச் சுவா் ரூ.5.37 கோடி மதிப்பில் தமிழக அரசால் சீரமைத்துத் தரப்படும்.

முழு கட்டுரையைப் படிக்க →