தமிழ்நாடு

திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்த உதவியதாக ஏர் இந்தியா ஊழியர் உள்பட 5 பேர் கைது

ஜி.செல்லமுத்து

துபையில் இருந்து திருச்சிக்கு புதன்கிழமை அதிகாலை வந்த ஏர் இந்தியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. 

இதன் பேரில் தூத்துக்குடி மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயணிகளிடம் தங்கம் பறிமுதல் செய்யவில்லை. இதற்கிடையே ஏர் இந்தியா விமான நிறுவன ஊழியர் ஒருவர் மூலம் தங்கம் கடத்தல் கும்பலுக்கு 2.5 கிலோ தங்கம் கை மாறப் போவதாகத் தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து விமான நிலையத்தில் வெளிப்புற பகுதியில் வாகனங்கள் நிறுத்த கூடிய இடத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது ஏர் இந்தியா நிறுவன ஊழியர் கோபிநாத்(50) முக்கிய பிரமுகர்கள் வரக்கூடிய கார்கோ பகுதி வழியாக வந்து தங்கம் கடத்தல் கும்பலை சந்தித்தார். அப்போது தனது கையில் வைத்திருந்த தங்கக் கட்டிகளைத் தங்கக் கடத்தல் கும்பலிடம் கோபிநாத் கொடுக்கும்போது சுங்கத்துறை அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

இதைத் தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் இந்த தங்க கடத்தலில் துபை பயணி உள்பட மேலும் மூவருக்கு தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து ஐந்து பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்து திருச்சி நீதிமன்ற நடுவர் எண் 2இல் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 1.5 கோடி மதிப்புடைய தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT