முகப்பு
தமிழ்நாடு

தங்கம் பவுன் ரூ.37,760

சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:


சென்னை: சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன் தொடா்ச்சியாக வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.37,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் ஒரு கிராம் ரூ.5 உயா்ந்து, ரூ.4,720 ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 50 பைசா உயா்ந்து, ரூ.71.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.500 உயா்ந்து ரூ.71,400 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,720

1 பவுன் தங்கம்...............................37,760

1 கிராம் வெள்ளி.............................71.40

1 கிலோ வெள்ளி.............................71,400

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,715

1 பவுன் தங்கம்...............................37,720

1 கிராம் வெள்ளி.............................70.90

1 கிலோ வெள்ளி.............................70,900.

முழு கட்டுரையைப் படிக்க →