தமிழ்நாடு

தமிழறிஞர் தொ.பரமசிவன் காலமானார்

DIN

பண்பாட்டு ஆய்வாளரும், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவருமான தொ.பரமசிவன் (70) வியாழக்கிழமை காலமானார்.

பாளையங்கோட்டை கீழ யாதவர் தெருவில் வசித்து வந்த தொ.பரமசிவன், உடல்நலக்குறைவால் வியாழக்கிழமை மாலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இரவு 7.45 மணிக்கு காலமானார். 

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக தமிழ்த் துறையின் முன்னாள் தலைவரான தொ.பரமசிவன், அறியப்படாத தமிழகம், பண்பாட்டு அசைவுகள், அழகர் கோயில், தெய்வம் என்பதோர், வழித்தடங்கள், பரண், சமயம் (தொ.ப-சுந்தர் காளி உரையாடல்), சமயங்களின் அரசியல், தொ.பரமசிவன் நேர்காணல்கள், விடு பூக்கள், உரைகல், இந்துதேசியம், நாள்மலர்கள், மானுடவாசிப்பு, பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, மரபும் புதுமையும், இதுவே சனநாயகம் உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

தொ.பரமசிவனுக்கு மனைவி இசக்கியம்மாள், மகன் மாசான மணி, மகள் விஜயலெட்சுமி ஆகியோர் உள்ளனர். தொ.பரமசிவனின் இறுதிச்சடங்கு திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. 
தொடர்புக்கு: 9486886667

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2: 116 சிறைக் கைதிகள் தோ்ச்சி

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

SCROLL FOR NEXT