அண்ணன் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
சீர்காழி: சீர்காழியை அடுத்த திருவெள்ளக்குளம் எனும் அண்ணன் கோயில் கிராமத்தில் அண்ணன் பெருமாள் அருள்பாலிக்கிறார்.
108 திவ்ய தேசங்களில் 28-வது ஸ்தலமான இங்கு மூலவர் அண்ணன் பெருமாள் ,உற்சவர் சீனிவாச பெருமாள் காட்சி தருகிறார். திருப்பதி பெருமாளுக்கு அண்ணன் என்று போற்றப்படும் அண்ணன் பெருமாள் கோவில் என வரலாறு கூறுகிறது. குமுதவல்லி நாச்சியாரின் அவதார ஸ்தலமான இங்கு சொர்க்கவாசல் திறப்பு அதிகாலை நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாசப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்று நவரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டு பிரதான வாயிலான சொர்க்க வாசலுக்கு எழுந்தருளினார்.
பின்னர் அங்கு சிறப்பு வழிபாடு , தீபாராதனை காட்டப்பட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்வு நடைபெற்றது இதில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.