முகப்பு
தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்கும் பணி தொடங்கியது.
பகிர்:

சேலம் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி இன்று காலை தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று வழங்கினர்.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.2,500 மற்றும் அரிசி, சர்க்கரை,கரும்பு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி எடப்பாடியல் நடந்த அரசு விழாவில் தெரிவித்திருந்தார்.

இந்தப் பரிசுத் தொகுப்பு வருகிற 4 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ரேஷன் கடைகளுக்கு பொதுமக்கள் வந்து சிரமப் படுவதை தடுக்க வீடு வீடாகச் சென்று டோக்கன் வழங்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.

இதன்படி சேலம் மாவட்டத்தில் அரிசி அட்டைதாரர்கள் 9 லட்சத்து 92 ஆயிரத்து 350 பேருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.

சனிக்கிழமை காலை முதல் சேலம் அரிசிபாளையம், பள்ளப்பட்டி மற்றும் அனைத்து  பகுதியிலும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் வழங்கினர்.

 இந்த பொங்கல்  பரிசு தொகுப்பு டோக்கனில்  கடை எண்,  கடையின் பெயர், அட்டை எண்,  அட்டைதாரரின் பெயர் பொருட்கள் வழங்கப்படும் தேதி, நேரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் வீடுவீடாக சென்று பொங்கல் பரிசு தொகுப்புக்குரிய டோக்கன் வழங்கப்படும் என்றும் வருகிற 4 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேலத்தில் இன்று காலை  பொதுமக்கள் திரளாக வந்து பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் வழங்க என கேட்டனர்.

ஆனால் ரேஷன் கடை ஊழியர்கள் நாங்களே வீடு வீடாக வந்து டோக்கன் வழங்குகிறோம். பின்னர் நான்காம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்து அனுப்பி வைத்து வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →