தமிழ்நாடு

மேட்டூர் அணை நிலவரம்

DIN


காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106.88 அடியிலிருந்து 106.66 அடியாக சரிய தொடங்கியது.

காவிரி டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால் பாசன தேவை அதிகரித்தது. இதனால் வினாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட வந்த நீரின் அளவு சனிக்கிழமை மாலை வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. 

அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 106.88 அடியிலிருந்து 106.66 அடியாக சரிந்தது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு  1270 கன அடியிலிருந்து 1235 கன அடியாக சரிந்தது.  

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 3000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400க ன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 73.74 டி.எம்.சியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT