தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் 
தமிழ்நாடு

விவசாயிகளுக்கு ஆதரவாக கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

DIN


கிருஷ்ணகிரி: வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக் கோரி தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து கிருஷ்ணகிரியில் உள்ள பாத்திமா அன்னை திருத்தலத்தில் தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தருமபுரி மறைமாவட்டத்தில் உள்ள 38 கத்தோலிக்க ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. கத்தோலிக்க சபையானது எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவானதோ, எதிரானதோ அல்ல.

போராடும் விவசாயிகளின் பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிட்ட வேண்டும் என பிரார்த்தனை நடைபெற்றதாக அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

தனுஷ் 54: படப்பிடிப்பு நிறைவு!

புதிய வாக்காளர் படிவத்தை நீக்கப்பட்ட வாக்காளர்கள் பயன்படுத்தலாமா?

வங்கதேசம்: வன்முறையில் 7 வயது சிறுமி உயிருடன் எரித்துக் கொலை!

SCROLL FOR NEXT