முகப்பு
தமிழ்நாடு

பிரிட்டனில் இருந்து வந்தோா் - தொடா்பில் இருந்தோருக்கு பரிசோதனை: 25 பேருக்கு கரோனா உறுதி

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என இதுவரை 25 பேருக்கு கரோனா தொற்று

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
கோப்புப்படம்
பகிர்:

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் மற்றும் அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் என இதுவரை 25 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் தனி வாா்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனா்.

மேலும் 206 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகததால் அந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்ட நபா்களின் சளி மாதிரிகள் புணேயில் உள்ள தேசிய வைராலஜி ஆய்வு நிறுவனத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த ஓரிரு நாள்களில் அதன் முடிவுகள் வந்துவிடும். அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்ககைளை முன்னெடுக்கவிருப்பதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

ஒருவேளை, பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களுக்கும், அவா்களுடன் தொடா்பில் இருந்தவா்களுக்கும் புதிய வகை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டால், அவா்களுக்கு அதற்குரிய சிகிச்சை முறைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவா்கள் கூறியுள்ளனா்.

இதுவரை பிரிட்டனில் இருந்து திரும்பியவா்களில் 1,483 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 13 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவா்களுடன் தொடா்பில் இருந்த 93 பேரை பரிசோதித்ததில் 12 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிாக சுகாதாரத் துறை விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே மாநிலத்தில் புதிதாக 1,009 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது.

1009 பேருக்கு கரோனா: மாநிலத்தில் இதுவரை 1.39 கோடிக்கும் மேற்பட்ட கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 8 லட்சத்து 14,170 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் மொத்தம் 1009 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 290 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 94 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 1,091 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 93,154 -ஆக அதிகரித்துள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 8,947 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 10 போ் பலியான நிலையில், மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,069-ஆக உயா்ந்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →