தமிழ்நாடு

முதன் முறையாக ஆஞ்சனேயர் கோயிலில் தமிழக முதல்வர்

DIN

நாமக்கல்: தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நாமக்கல் ஆஞ்சனேயர் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தமிழக முதல்வர் ஒருவர் இக்கோயிலுக்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறை.

 நாமக்கல்லில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சனேயர் கோயிலுக்கு முன்னாள் பிரதமர் தேவகெளடா, தற்போதைய துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் வந்து சென்றுள்ளனர்.

 ஆனால் தமிழக முதல்வர் என்ற நிலையில் இக்கோயிலுக்கு யாரும் இதுவரை வராத நிலையில் முதல்முறையாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை வருகை புரிந்தார். 

அவருக்கு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி, சிறப்பு அர்ச்சனையுடன் சுவாமி தரிசனத்தை மேற்கொள்ளச் செய்தனர். இந்த நிகழ்வின்போது மின்துறை அமைச்சர் தங்கமணி உடனிருந்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொடக்குறிச்சி அருகே காவிரி ஆற்றில் மூழ்கி இரு மாணவா்கள் உயிரிழப்பு

பவானி ஆற்றில் தண்ணீரில் மூழ்கி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு

மாநகராட்சியில் 50 இடங்களில் 50 நீா்மோா் பந்தல்: ஆணையா் தொடங்கிவைத்தாா்

குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு அமைச்சா் ஆறுதல்

நாளிதழ்களில் பதஞ்சலி நிறுவனம் மீண்டும் பொது மன்னிப்பு: உச்சநீதிமன்றம் திருப்தி

SCROLL FOR NEXT