தமிழ்நாடு

வேதா ஆயத்த ஆடை பூங்கா: விழாவைத் தொடங்கி வைத்தார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே  அமையவுள்ள ஆயத்த ஆடை பூங்காவுக்கான பணியாளர்களுக்கு தையல் பயிற்சி தொடக்க விழா இன்று (டிச.29) நடைபெற்றது. பயிற்சியை கைத்தரி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தார். 

ஆயக்காரன்புலம் - 4 ஆம் சேத்தி கிராமத்தில் சுமார் 140 ஏக்கர் பரப்பு நிலத்தில், வேதா ஆயத்த ஆடை தொழிற்பூங்கா அமையவுள்ளது. இங்கு பணியாற்ற ஏதுவாக முதல் கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ள 210 பெண்களுக்கான பயிற்சி தொடக்க விழாவுக்கு நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்ச்சியில் டீமா எனப்படும்  திருப்பூர்  ஜவுளி ஏற்றுமதி முதலீட்டாளர்கள்  பேர் பங்கேற்றனர். 

நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் இரா.கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் டி.வி.சுப்பையன், திலீபன்,ஒன்றியக் குழுத் தலைவர் கலா அன்பழகன்,  குருகுலம்  நிர்வாகி அ.வேதரெத்தினம், ஊராட்சி மன்றத் தலைவர் தமிழரசி நெடுஞ்செழியன், ஒன்றியக் குழு உறுப்பினர் மு.ராஜசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT