தமிழ்நாடு

மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்திய கோவை மாணவர்கள்: இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை

DIN

மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தி கோவையில் 1500 மாணவ,மாணவிகள் பச்சை ஆடை அணிந்து மரம் போல நின்றது இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை பெற்றது.

கோவையை அடுத்த தடாகம் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.லீடர்ஸ் பப்ளிக் வளாகத்தில் வி.கே.வி.மற்றும் கே.பி.ஆர்.சார்பாக பசுமை விழிப்புணர்வு எனும் தலைப்பில் மரம் வளர்ப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக மாணவ,மாணவிகளின் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் எனும் சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

நஞ்சுண்டாபுரம் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற இதில் பள்ளியின் தலைவர் திருமதி ராசிகா முன்னிலை வகித்தார்.இந்த சாதனை நிகழ்ச்சியில் இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸின் கோவை மண்டல பார்வையாளர் விவேக் நாயர் மேற்பார்வையில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் மூன்றாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ முதல் 1500  மாணவ,மாணவிகள்  பச்சை ஆடை வர்ணம் ஆடை அணிந்து  வரிசையாக மரம் போல நின்று சில நிமிட நேரத்திற்குள் நின்று காட்சியளித்தனர்..இது குறித்து பள்ளியின் தலைவர் ராஷிகா மற்றும் ஊராட்சி தலைவர் சுந்தர்ராஜ் ஆகியோர் பேசுகையில் பசுமை புரட்சி யை மாணவ,மாணவிகளிடமும் ஏற்படுத்தும் வகையில் இந்த சாதனை முயற்சியை நடத்தியதாகவும் ,இதனால் இளம் தலைமுறையினர் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து அறிந்து கொள்ள முடிவதாக தெரிவித்தனர். 

இந்நிகழ்ச்சியில் பெற்றோர் மற்றும் மாணவ,மாணவியர்கள் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

புதுச்சேரி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது!

SCROLL FOR NEXT