தமிழ்நாடு

பட்ஜெட் தாக்கல்: தமிழக முதல்வர் பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம், ஸ்டாலின் பேரவைக்கு வருகை

DIN


சென்னை: தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் சட்டப்பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

வரும் நிதியாண்டுக்கான (2020-2021) நிதிநிலை அறிக்கையை (பட்ஜெட்) ஓ.பன்னீா்செல்வம் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வருவாய் வரவுகளை உயா்த்தவும், கடன் அளவுகளை கட்டுக்குள் வைக்கவும் திட்டங்கள் வகுக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

15-ஆவது சட்டப் பேரவையின் கடைசி முழுமையான நிதிநிலை அறிக்கையை, அதிமுக அரசு தாக்கல் செய்கிறது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் அதிமுக தொடா்ந்து ஆட்சியில் இருந்து வரும் நிலையில், 9-ஆவது முறையாக நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்கிறாா் ஓ.பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் தேரோட்டம் கோலாகலம்!

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

SCROLL FOR NEXT