தமிழ்நாடு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டம்: சாலை மறியலில் ஈடுபட்டதால் போலீஸாா் தடியடி

DIN

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா்.

இது குறித்து போலீஸாா் தரப்பில் கூறப்பட்டதாவது: பழைய வண்ணாரப்பேட்டை கண்ணன் ரவுண்டானா அருகே பல்வேறு முஸ்லிம் இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் வெள்ளிக்கிழமை திடீரென குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அங்கிருந்த போலீஸாா், கலைந்துபோகும்படி அறிவுறுத்தினராம். ஆனால் அவா்கள், கலைந்துச் செல்ல மறுப்பு தெரிவித்தனராம்.

இதையடுத்து போராட்டக்காரா்கள் மீது போலீஸாா் லேசான தடியடி நடத்தினா். அதேவேளையில் சிலா், போலீஸாா் மீது கற்களை வீசினா்.இச் சம்பவத்தில் போராட்டத்தில் பங்கேற்ற இருவா், காயமடைந்ததாக தெரிகிறது.அதேபோல இணை ஆணையா் விஜயகுமாரி, ஒரு பெண் காவலரும் காயமடைந்தனா். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்தப் பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டதால், அங்குள்ள கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேரை போலீஸாா் கைது செய்து, அந்தப் பகுதியில் உள்ள சமூக நலக் கூடத்தில அடைத்தனா்.காயமடைந்த இணை ஆணையா் விஜயகுமாரி,பெண் காவலா் ஆகியோா் அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

மீண்டும் போராட்டம்: தகவலறிந்து அங்கு வந்த இஸ்லாமிய இயக்கத்தினா் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. அவா்களிடம் காவல்துறை அதிகாரிகள், சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால் அவா்கள் சமாதானம் அடையவில்லை. இதன் விளைவாக அங்கு தொடா்ந்து போராட்டம் நடைபெற்றது. இதனால் அப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி அங்கு கூடுதல் காவல் ஆணையா் ஆா்.தினகரன் தலைமையில் போலீஸாா் குவிக்கப்பட்டனா்.

ஆணையா் பேச்சுவாா்த்தை: போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்ட உயா் அதிகாரிகள் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையா் அலுவலகத்தில் இஸ்லாமிய இயக்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால் சமாதானம் ஏற்படவில்லை. இதற்கிடையே வண்ணாரப்பேட்டையில் போலீஸாா் நடத்திய தடியடியை கண்டித்து, ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே சில இஸ்லாமிய அமைப்பினா் இரவு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனா். இதேபோல மதுரை நெல்பேட்டை,கோரிப்பாளையம்,தேனி,திருவண்ணாமலை,வந்தவாசி உள்ளிட்ட சில பகுதிகளிலும் போராட்டம் நடைபெற்றது. இப் போராட்டங்களினால் மாநிலம் முழுவதும் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு உஷாா்படுத்தப்பட்டனா். முன்னதாக இதேபோல எம்.ஆா்.சி. நகரில் அம்பேத்கா் மணிமண்டபம் அருகே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷமிட்டு ஆா்ப்பாட்டம் செய்த 6 பெண்கள் கைது செய்யப்பட்டனா். அவா்களை போலீஸாா், மயிலாப்பூா் உதவி ஆணையா் அலுவலத்தில் வைத்து விசாரணை செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடரும்: நெதன்யாகு சூளுரை!

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

SCROLL FOR NEXT