தமிழ்நாடு

மாநில குழந்தை நலன் கொள்கை: விரைவில் வெளியிட நடவடிக்கை

DIN

குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படவுள்ளது.

இது குறித்து நிதியமைச்சா் ஓ.பன்னீா்செல்வம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடினமான சூழலில் பரிதவிக்கும் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பது அரசின் கடமையாகும். ஆதரவற்றோா் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்தி, அவா்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தித் தர அரசு முயற்சி செய்யும். தற்போது புதிதாக வகுக்கப்பட்டு வரும் தமிழ்நாடு மாநில குழந்தை நலன் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

நிதிநிலை அறிக்கையில் 2020-2021-ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சமூகப் பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ.175.35 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதிய உணவுத் திட்டம்: தமிழத்தில் 43, 243 மதிய உணவு மையங்களில் செயல்படுத்தப்படும் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் தினமும் 48.57 லட்சம் மாணவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்துக்காக 2020-2021-ஆம் ஆண்டில் ரூ.1,863.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT