தமிழ்நாடு

முதல்வர் பழனிசாமியுடன் டிஜிபி திரிபாதி, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அவசர ஆலோசனை

டிஜிபி திரிபாதி மற்றும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

DIN

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் தமிழக டிஜிபி திரிபாதி மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள முதல்வரின் இல்லத்தில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக, தமிழகத்தில் சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க 6 சிறப்பு அதிகாரிகளை நியமித்து தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT