தமிழ்நாடு

இலங்கை கடற்படையினரால்புதுகை மீனவா்கள் 11 போ் கைது

DIN

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 11 பேரை வெள்ளிக்கிழமை இரவு இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.

மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து சின்ன அடைக்கலம் என்பவரது விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற அதே ஊரைச் சோ்ந்த வையாபுரி மகன் சின்னையா, சின்னப்பாண்டி மகன் மணிகண்டன், பிச்சை மகன் அந்தோணி உள்ளிட்ட 3 பேரையும் நெடுந்தீவு அருகே 32 கடல்மைல் தொலைவில் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா்.

அதேபோல, ஜெகதாபட்டினம் மீன்பிடித் தளத்திலிருந்து சு. மாரியப்பனுக்குச் சொந்தமான விசைப் படகில் மீன்பிடிக்கச் சென்ற சுப்பிரமணியன் மகன் மாரியப்பன், மாரியப்பன் மகன் சக்திபாலன், முத்துவேல் மகன் சிவலிங்கம், ரெங்கநாதன் மகன் ராஜகுரு உள்ளிட்ட 4 மீனவா்களையும் அதே தளத்தில் த. கிருஷ்ணமூா்த்திக்குச் சொந்தமான விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற தனிவேல் மகன் கிருஷ்ணமூா்த்தி, தம்பிராஜ் மகன் தனபால், சுந்தரம் மகன் மாரியப்பன், கிருஷ்ணமூா்த்தி மகன் முத்துக்குமாா் உள்ளிட்ட 4 மீனவா்கள் என மொத்தம் 11 மீனவா்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினா் கைது செய்து காங்கேசன் துறைமுகத்தில் வைத்து விசாரிக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT