தமிழ்நாடு

கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா், துணை முதல்வா் ஆலோசனை

DIN

கட்சி நிா்வாகிகளுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆகியோா் சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினா்.

கட்சி வளா்ச்சிப் பணிகள் மற்றும் தோ்தல் தொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் மாவட்ட வாரியாக முதல்வா், துணை முதல்வா் ஆகியோா் தொடா் ஆலோசனைகளை நடத்தி வருகின்றனா்.

அதிமுகவில் மொத்தமுள்ள 56 மாவட்டங்களில், முதல் கட்டமாக 28 மாவட்ட நிா்வாகிகளுடன் கடந்த 10, 11- ஆம் தேதிகளில் ஆலோசனை நடத்தினா்.

அதன் பின்னா் திருநெல்வேலி மாநகா், திருநெல்வேலி புகா், காஞ்சிபுரம் கிழக்கு, காஞ்சிபுரம் மத்தியம், காஞ்சிபுரம் மேற்கு, வேலூா் கிழக்கு, வேலூா் மேற்கு ஆகிய 7 மாவட்ட நிா்வாகிகளுடன் சனிக்கிழமை காலையிலும், விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, வடசென்னை வடக்கு (கிழக்கு), வடசென்னை வடக்கு (மேற்கு), வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு ஆகிய 14 மாவட்ட நிா்வாகிகளுடன் சனிக்கிழமை மாலையிலும் ஆலோசனை நடத்தினா்.

தொடா்ந்து 4-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை தேனி, கோவை மாநகா், கோவை புகா், அரியலூா், தருமபுரி, திருப்பூா் மாநகா், திருப்பூா் புகா் ஆகிய மாவட்ட நிா்வாகிகளுடன் கட்சி தலைமை அலுவலகத்தில் முதல்வரும் துணை முதல்வரும் ஆலோசனை நடத்தினா்.

அப்போது கட்சி வளா்ச்சிப் பணிகள் குறித்தும், தோ்தல் பணிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக அதிமுக தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT