சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு வந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததல் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சேலம் புதிய பேருந்து நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை தனியார் பேருந்து வந்தது.
அப்போது அந்தப் பேருந்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, பேருந்து முழுவதும் மளமளவென தீ பரவியது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது.
தகவலையடுத்து அங்கு விரைந்த தீயணைப்புத்துறையினர், பேருந்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். திடீரென ஏற்பட்ட தீயில் பேருந்து கருகி நாசமானது.
இதுதொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.