முகப்பு
தமிழ்நாடு

நிலத்தடி நீரை அனுமதியின்றி பயன்படுத்திய குடிநீர் நிறுவனங்களுக்கு சீல்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை வணிக ரீதியில் பயன்படுத்திய குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 3:55 PM
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அனுமதியின்றி நிலத்தடி நீரை வணிக ரீதியில் பயன்படுத்திய குடிநீர் நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

குடிமல்லூரில் லிம்ரா குடிநீர் நிறுவனம்(limra pakaged drinking water company), 

வன்னிவேடு என்.எம்.எஸ் குடிநீர் நிறுவனம் (NMS packaged drinking water company),

தென்கடப்பந்தாங்கல் அக்குவா ஸ்ரீ பார்ம்ஸ் குடிநீர் நிறுவனம் (Aqua sri farms packaged drinking water company)

அம்மணந்தாங்கல் கே.வி.என் நிறுவனம்(KVN packaged drinking water company) ஆகியவற்றுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வாலாஜா தலைமையில் வருவாய் ஆய்வாளர் திருமதி.சோனியா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் திரு.அதியமான், திரு.பழனி, திருமதி.சங்கீதா ஆகியோர் இன்று பிற்பகல் சுமார் 3.00 மணியளவில் காவல்துறை ஒத்துழைப்புடன் சீல் வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.