தமிழ்நாடு

கோவையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை அதிமுக சார்பில் அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாநகர மாவட்டச் செயலாளர் மரியாதை செலுத்தினார்.

DIN

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை அதிமுக சார்பில் அவினாசி சாலையில் உள்ள ஜெயலலிதாவின் உருவச்சிலைக்கு மாநகர மாவட்டச் செயலாளர் பி.ஆர்.ஜி அருண்குமார், எம்.எல்.ஏ ஆர்.குட்டி ஆகியோர்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தொடர்ந்து இதயதெய்வம் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் அதிமுக தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுனன் மலர்தூவி மரியாதை செலுத்திவிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.

சுங்கம் பகுதியிலுள்ள அரசுப் போக்குவரத்து கழக பணிமனை முன்பு தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். மேலும், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் கொடியேற்றுதல் போன்ற நிகழ்ச்சிகளில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர். 

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் முன்னாள் அமைச்சர் வேலுசாமி தலைமையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT