தமிழ்நாடு

எஸ்எஸ்ஐ வில்சன் வழக்கு: தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகள் வீடுகளிலிருந்து ஐபேட் உள்ளிட்ட ஆவணங்கள் பறிமுதல்

DIN

தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகள் வீடுகளிலிருந்து ஐபேட் உள்ளிட்ட ஆவணங்களை என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை நடத்திய சோதனையின் முடிவில் பறிமுதல் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் திங்கள்கிழமை அதிகாலை முதல் தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர்.

வில்சன் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக இந்த வழக்கில் கைதான தவ்பீக், சமீம் உள்பட 4 பேரும் இந்த வீட்டில் தங்கி இருந்ததாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திருச்செந்தூர் அருகே காயல்பட்டினத்தில் மொய்தீன் பாத்திமா என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும் நெய்வேலியில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடைபெற்று

இதில், கைது செய்யப்பட்ட தீவிரவாதி காஜாமைதீன் மனைவிகளான கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள முதல் மனைவி இந்திரா காந்தி, கொள்ளுமேட்டில் உள்ள மூன்றாவது மனைவி பத்ருன்னிஷா ஆகியோரது வீடுகளிலும் மற்றும் மேல்பட்டாம்பாக்கம் சேர்ந்த ஜாபர் அலி, பரங்கிப்பேட்டை சேர்ந்த அப்துல் சமது ஆகியோரது வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் துணை கண்காணிப்பாளர் சாகுல் ஹமீது தலைமையில் சோதனை நடத்தினர். 

8 பேர் கொண்ட குழுவினர் ஒவ்வொருவரது வீடுகளிலும் சுமார் 3 மணி நேரம் நடத்திய சோதனையில், லேப்டாப், செல்போன், ஐபேட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசியலுக்கும் எங்களுக்குமான உறவு சிறுவயதிலிருந்தே தொடங்கிவிட்டது: ராகுல் பகிர்ந்த விடியோ

தேவ கௌடாவுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து!

தாய்லாந்தில் மடோனா செபாஸ்டியன்...!

அமுதூற்றினை ஒத்த இதழ்கள்! நிலவூறித் ததும்பும் விழிகள்!

கடையநல்லூரில் இரு தரப்பினர் மோதல், சாலை மறியல்

SCROLL FOR NEXT