கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி: களம் காணும் 300 காளையர்களும் 600 காளைகளும்
மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 - க்கும் மேற்பட்ட காளைகளும், 300 - க்கு மேற்பட்ட காளையர்களும் களம் கண்கின்றனர்.
மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் நடைபெறும் ஜல்லிக்கட்டுப் போட்டியில் 600 - க்கும் மேற்பட்ட காளைகளும், 300 - க்கு மேற்பட்ட காளையர்களும் களம் கண்கின்றனர்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் மணப்பாறை சுற்றுவட்டார பகுதி மற்றும் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து வந்துள்ள 600-க்கு மேற்பட்ட காளைகளும், 300-க்கு மேற்பட்ட காளையர்களும் களம் காணுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியினை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் டி.ரெத்தினவேல் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.சந்திரசேகர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். முதலில் மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வாடிவாசல் அழைத்து வரப்பட்ட கோவில் காளைகள் முதலில் அவிழ்க்கப்பட்ட நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்க்கப்பட்டு வருகிறது.
வாடிவாசல் வழியே திமிறி சீறிப்பாய்ந்த காளைகள், காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளைகள் தொட்டுக் கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தன. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு தங்கக் காசு, வெள்ளிக்காசு, ரொக்கம், சைக்கிள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.