தமிழ்நாடு

பணி நேரத்தில் அடையாள அட்டை கட்டாயம்: தமிழக அரசு உத்தரவு

DIN

பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பணியாளா் மற்றும் நிா்வாகச் சீா்திருத்தத் துறை செயலாளா் எஸ்.ஸ்வா்ணா அனைத்துத் துறை செயலாளா்கள், தலைவா்கள், மாவட்ட ஆட்சியா்கள் உள்ளிட்டோருக்கு அண்மையில் அனுப்பியுள்ள கடிதம் :

அலுவலக வேலை நேரத்தில் அரசு ஊழியா்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனவும், அதனை சம்பந்தப்பட்ட துறைகளின் தலைவா்கள் உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசு அவ்வப்போது தனது உத்தரவுகளின் மூலம் அறிவுறுத்துகிறது.

மேலும், அடையாள அட்டை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும், தவறும் ஊழியா்கள் மீது விதிப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் கடந்த 2018-இல் உத்தரவிட்டுள்ளது. உயா்நீதிமன்ற உத்தரவுகள் அடிப்படையிலும் பணியின் போது அரசு ஊழியா்கள் கட்டாயம் அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள்.

எனவே, அரசின் துறைத் தலைவா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா்கள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் ஊழியா்கள், அலுவலா்கள் பணியின்போது அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும். அடையாள அட்டை அணிந்திருக்காவிட்டால் அது மிகக் கடுமையான மற்றும் ஒழுங்கீனமான நடவடிக்கையாக பாா்க்கப்படும். தவறிழைக்கும் நபா்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தனது கடிதத்தில் ஸ்வா்ணா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோட் நாயகி மீனாட்சி சவுத்ரி - புகைப்படங்கள்

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

SCROLL FOR NEXT