தமிழ்நாடு

தமிழ்நாடு 34.57 சதவீத தனியார் முதலீடுகளை இழந்திருப்பது, உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையே காட்டுகிறது: மு.க.ஸ்டாலின்

DIN

தமிழ்நாடு 34.57 சதவீத தனியார் முதலீடுகளை இழந்திருப்பது, உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையே காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பதிவில், 2019 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 34.57 சதவீத தனியார் முதலீடுகளை இழந்திருப்பது, அதிமுக ஆட்சி நடத்திய உலக முதலீட்டாளர் மாநாடுகளின் தோல்வியையும், லட்சணத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஊழலின் உருவமான அதிமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் புதிய முதலீடுகள், புதிய தொழிற்சாலைகள் மட்டும் இன்றி, புதிய முதலீட்டாளர்களும் தமிழ்நாட்டின் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை என்பது வேதனை தருகிறது. 

இதனால் தொழில் வளர்ச்சி மட்டுமின்றி - மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் அதிமுக ஆட்சியில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ‘என்று மறையும் அதிமுக ஆட்சியின் இந்த இருண்ட அத்தியாயம்?’ என்பதுதான் வேலை வாய்ப்புகள் இன்றித் தவிக்கும் தமிழக இளைஞர்களின் இன்றைய ஏக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT