தமிழ்நாடு

பிறந்தநாளையொட்டி, மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் கனிமொழி

DIN

திமுக எம்.பி கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி இன்று தனது சகோதரரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார். 

திமுக மகளிரணித் தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான  கனிமொழி, தனது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது சகோதரரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில்  சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும், திமுக தலைவர்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

முன்னதாக கனிமொழி தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திலும், அறிஞர் அண்ணா நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 17-ல் விண்வெளி செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்!

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

SCROLL FOR NEXT