தமிழ்நாடு

கூட்டணி இல்லாமலே எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்: பொன்.ராதாகிருஷ்ணன்

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். 

DIN


உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்று மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழகத்தின் அடுத்த பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது குறித்த கருத்துக்கேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய முன்னாள் அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 'தமிழக பாஜக தலைவரை தேர்வு செய்யும் நேரம் வந்துவிட்டது. விரைவில் புதிய தலைவரை கட்சி அறிவிக்கும். தமிழகத்தில் பாஜக காலம் தொடங்கி விட்டது. அதற்கு உதாரணமே உள்ளாட்சித் தேர்தலில் பெற்றுள்ள பாஜகவின் வெற்றி. இதற்கு மக்கள் நல்ல வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக மக்கள் பாஜகவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு இருக்கலாம் என்பதே எனது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சி ஆதரவு இல்லாமல் எங்களால் மக்களின் ஆதரவைப் பெற முடியும்' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரிஷபத்துக்கு எப்படி இருக்கும் இன்று.. தினப்பலன்கள்!

நாளைய மின்தடை: எழும்பூா், சோழிங்கநல்லூா், கோடம்பாக்கம், சேத்துப்பட்டு

வேலூா் மாவட்டத்தில் 15 துணை வட்டாட்சியா்கள் இடமாற்றம்

ஆடிப் பெருக்கு தினத்தில் பெண்கள் சிறப்பு பூஜை

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT