கோப்புப் படம் 
தமிழ்நாடு

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

DIN

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை அவதூறாகப் பேசிய வழக்கில்,  செய்யப்பட்டுள்ள நெல்லை கண்ணனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வருகிற 9ம் தேதிக்கு ஒத்திவைத்து நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

நெல்லையில் அண்மையில் நடைபெற்ற குடியுரிமை மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் மூத்த நிா்வாகியும், தமிழ் இலக்கியவாதியுமான நெல்லை கண்ணன் பிரதமா் மோடி மற்றும் உள்துறை அமைச்சா் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியுள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில், பேச்சாளா் நெல்லை கண்ணன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரை போலீஸார் கைது செய்தனா். தற்போது சேலம் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இதன் தொடர்ச்சியாக நெல்லை கண்ணன் தரப்பில் இருந்து கடந்த 3ம் தேதி ஜாமீன் கேட்டு நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்ட நிலையில், ஜாமீன் கேட்டு மீண்டும் மனுதாக்கல் செய்யப்பட்டது. நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி நசீர் அகமது முன்னிலையில் இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையில், நெல்லை கண்ணனுக்கு ஜாமீன் வழங்க அரசுத்தரப்பு வழக்கறிஞர் ஆட்சேபனை தெரிவித்ததுடன், ஆவணங்களை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று கோரினார். இதையடுத்து, விசாரணையை வருகிற 9ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: புகாா் தெரிவிக்க எண்கள் வெளியீடு

கரூா் சம்பவம்: தில்லியில் விஜய்யிடம் சிபிஜ 6 மணிநேரங்களுக்கு மேல் விசாரணை!

தில்லி யமுனை நதியில் பிப்ரவரி முதல் ஆடம்பர கப்பல் பயணம அமைச்சா் கபில் மிஸ்ரா தகவல்

பிப்.1-இல் மத்திய நிதிநிலை அறிக்கை: ஓம் பிா்லா தகவல்

தேசிய நாடகப் பள்ளி மூலம் கோமல் தியேட்டரின் ‘திரெளபதி’ நாடகம் தோ்வு

SCROLL FOR NEXT