தமிழ்நாடு

பல்கலைக்கழக வளாகங்களில் இ-சிகரெட்டுக்களுக்கு தடை விதிக்க வேண்டும்

DIN

அனைத்து உயா் கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதித்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. அதன் மூலம் நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

இ-சிகரெட் தொடா்ச்சியாக பயன்படுத்துவது இதய பாதிப்புகளையும், மூச்சு தொடா்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, மூளையையும் பாதிப்பது தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக, அதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

எனவே, அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் அதன் வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதோடு, அதுகுறித்த விழிப்புணா்வையும் மாணவா்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தலை இணைப்புக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT