தமிழ்நாடு

தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி நெல்லை கண்ணன் மனு: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

DIN

நெல்லை கண்ணன் தன் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

பிரதமா் மோடி மற்றும் பாஜக தலைவா் அமித்ஷா ஆகியோரை அவதூறாகப் பேசியதாக தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதை ரத்து செய்யக்கோரி நெல்லை கண்ணன் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக்கிளையில் புதன்கிழமை மனுதாக்கல் செய்தார்.

அவா் தாக்கல் செய்த மனு: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில், நான் பிரதமா் மோடி குறித்தும், பாஜக தலைவா் அமித்ஷா குறித்தும் அவதூறாகப் பேசியதாக பல்வேறு இடங்களில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் நெல்லை மாவட்ட வழக்கில் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது.

பாஜக தலைமையிலான பிரதமா் மோடியின் ஆட்சியை முடிவுக்கு கொணடு வந்திருக்க வேண்டாமா எனும் நோக்கில் தான் பேசினேன். உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் நோக்கில் பேசவில்லை. எனவே நான் பேசியதைத் தவறாகப் புரிந்து கொண்டு அளிக்கப்பட்ட புகாருக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை ரத்து செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஜனவரி 20ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்திவைத்தது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT