ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெற்ற 12 ஊராட்சி ஒன்றியங்களில் 8 தலைவர் பதவி, 4 துணைத்தலைவர் பதவிகளை அதிமுக கைப்பற்றியது. அதிமுக தனது கூட்டணி கட்சியான பாமகவுக்கு 4 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளை விட்டுக்கொடுத்துள்ளது.
திமுக 3 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவியையும், கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஒரு தலைவர் பதவியையும் கைப்பற்றின. துணைத்தலைவரை பொறுத்தமட்டில் திமுக 3 இடங்களையும், திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவுடன் எஸ்டிபிஐ கட்சி ஒரு துணைத்தலைவர் பதவியையும் வென்றது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு சனிக்கிழமை மறைமுக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஈரோடு ஒன்றியத்தில் போதிய எண்ணிக்கையில் வார்டு உறுப்பினர்கள் வராததாலும், தூக்கநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் வாக்குச்சீட்டுகளை பறித்துசென்று அதிமுக உறுப்பினர் கிழித்து போட்டதாலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
எஞ்சிய 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் காலை 11 மணிக்கு தலைவர் தேர்தலும், மாலை 3 மணிக்கு துணைத்தலைவர் தேர்தலும் நடைபெற்றது. இதில் தலைவர், துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம்:
1.மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் எஸ்.கணபதி-அதிமுக
துணைத்தலைவர் மயில் என்ற சுப்பிரமணி-அதிமுக
2.கொடுமுடி ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் ரா.லட்சுமி - திமுக
துணைத்தலைவர் ப்ரீத்தி-திமுக
3.சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் டி.காயத்ரி-திமுக
துணைத்தலைவர் கே.பன்னீர்செல்வம்-திமுக
4.பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் ஜெ.சாந்தி-அதிமுக
துணைத்தலைவர் எம்.ஆர்.உமா மகேஸ்வரன்-அதிமுக
5.அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் எஸ்.விஜயநிர்மலா-அதிமுக
துணைத்தலைவர் ஜி.குமரவேல்-பாமக
6.பவானி ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் வி.பூங்கோதை-அதிமுக
துணைத்தலைவர் எஸ்.ராஜேந்திரன் பா.ம.க
7.தாளவாடி ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் கே.ரத்தினம்மா-காங்கிரஸ்
துணைத்தலைவர் என்.முஜிப்புல்லா-எஸ்டிபிஐ
8.சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் கே.சி.பி.இளங்கோ-திமுக
துணைத்தலைவர் சு.சுப்புலட்சுமி-திமுக
9.பவானிசாகர் ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் பி.சரோஜா-அதிமுக
துணைத்தலைவர் எம்.பாலன்-அதிமுக
10.அந்தியூர் ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் கே.வளர்மதி-அதிமுக
துணைத்தலைவர் கே.முத்துலட்சுமி-பாமக
11.நம்பியூர் ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் எம்.சுப்பிரமணியம்-அதிமுக
துணைத்தலைவர் கே.அமுதா-அதிமுக
12.கோபிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம்:
தலைவர் கே.பி.மௌதீஸ்வரன்-அதிமுக
துணைத்தலைவர் எஸ்.காமாட்சி-பாமக.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.