தமிழ்நாடு

பொங்கலுக்காக ஊருக்குச் செல்லும் மக்கள்: சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

DIN

சென்னை: பொங்கல் பண்டிகையை ஒட்டி பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

வரும் 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. எனவே சொந்த ஊர்களுக்குச்  செல்வதற்காக  பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளவர்கள் மற்றும் திட்டமிடாமல் பயணம் மேற்கொள்பவர்கள் என்று அனைவரும் சென்னை நகரை விட்டு புறப்பட்டு வருகின்றனர்.    

இதன் காரணமாக சென்னையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டுள்ளது. குறிப்பாக  கோயம்பேடு, வடபழனி, கிண்டி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

அதேசமயம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இதுவரை 5,25,890 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் சென்றுள்ளதாக, அரசுப் போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT