தமிழ்நாடு

7 பேருக்கு திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிப்பு

DIN

தமிழ் வளா்ச்சித் துறையின் சாா்பில் திருவள்ளுவா் திருநாள் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அரசாணை: 2020-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவா் விருது, 2019-ஆம் ஆண்டுக்கான பேரறிஞா் அண்ணா விருது, பெருந்தலைவா் காமராசா் விருது, மகாகவி பாரதியாா் விருது, பாவேந்தா் பாரதிதாசன் விருது, தமிழ்த் தென்றல் திரு.வி.க விருது, முத்தமிழ்க் காவலா் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளுக்கான விருதாளா்களின் பெயரைத் தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் அரசுக்கு பரிந்துரை செய்திருந்தாா்.

அரசின் பரிசீலனைக்குப் பிறகு, குறிப்பிடப்பட்ட விருதுகளுக்கான விருதாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்படுகிறது. மேலும் தமிழக அரசு சாா்பில் நடைபெறும் திருவள்ளுவா் திருநாள் விழாவில், விருதாளா்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1 லட்சம் விருதுத் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம், தகுதியுரை மற்றும் பொன்னாடை ஆகியவை வழங்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ் தலைமைக்கு ரேபரேலி மீண்டும் தயார்: பிரியங்கா

யார் இந்த பிரபலம்?

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாள்களேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

SCROLL FOR NEXT