தமிழ்நாடு

குன்னூரில் காலில் குழாய் மாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிய காட்டெருமை உயிரிழப்பு

DIN

குன்னூர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காலில்  குழாய் மாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிய காட்டெருமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் குன்னுார் எடப்பள்ளி கிராமத்தில் காலில்  குழாய் மாட்டி காயங்களுடன் உயிருக்கு போராடிய காட்டெருமைக்கு செவ்வாய் கிழமை மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப்  பின் அது உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம்குன்னூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வன விலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது குறிப்பாக காட்டெருமை, கரடி, சிறுத்தை மற்றும் யானை போன்ற விலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உலா வருவது வாடிக்கையாகி இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக காட்டெருமை ஒன்று வலது காலில் குழாய்  ஒன்று கால் இடையில் மாட்டிக் கொண்டு காயத்துடன்  எடப்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்தது இதனை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் உதவி கால்நடை மருத்துவர் கோச்சாலன் வரவழைக்கப்பட்டு துப்பாக்கி மூலமாக காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தி மயக்கமடைந்த நிலையில் சிகிச்சை  அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சைக்குப் பின் காட்டெருமை  உயிரிழந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT