தமிழ்நாடு

துடிப்பு மிகு தமிழ்ச் சமூகத்துக்கு பொங்கல் வாழ்த்துகள்: பிரதமர் மோடி

DIN

தமிழர் திருநாளாம் தை முதல் நாளான பொங்கல் பண்டிகை தமிழகம் முழுவதும் கோலாகலமாகவும், உற்சாகமாகவும் புதன்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், பொங்கல் திருநாளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டதாவது, உலகம் முழுவதிலும் உள்ள துடிப்பு மிகு தமிழ்ச் சமூகம் பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிறது. இத்திருநாள் அனைவரின் வாழ்வையும் எல்லையற்ற வளங்களால் நிரப்பிடட்டும். அனைவரும் சிறப்பான நல்வாழ்வு பெற்றிடட்டும். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தமிழகம் பல நூறு ஆண்டுகளாக தேசத்தின் வழிகாட்டியாக இருந்துள்ளது. சமூக சீா்திருத்தத்துடன் கூடிய பொருளாதார வளா்ச்சி இங்குதான் சாத்தியப்பட்டிருக்கிறது. உலகின் தொன்மையான மொழியான தமிழின் தாயகமாக இந்த மண்தான் விளங்கிக் கொண்டிருக்கிறது. ஐ.நா. அரங்கில் ‘யாதும் ஊரே; யாவரும் கேளிா்’ என்ற மூதுரையை தமிழில் உரைக்கும் பேறு எனக்கு கிடைத்தது என ‘துக்ளக்’ பொன் விழாவை ஒட்டி காணொலியில் வாழ்த்துரை வழங்கியபோது பிரதமா் மோடி குறிப்பிட்டாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT