தமிழ்நாடு

தமிழக அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு

தமிழக அரசு சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

DIN

தமிழக அரசு சார்பில் 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழக அரசு ஆண்டுதோறும் பெரியார் மற்றும் அம்பேத்கர் விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது செஞ்சி ராமச்சந்திரனுக்கும், அம்பேத்கர் விருது முனைவர் க.அருச்சுனனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பெரியார் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கப்படுகிறது. அதுபோன்று அம்பேத்கர் விருதுடன் ரூ.1 லட்சம் ரொக்கம் மற்றும் பொற்கிழியும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

முன்னதாக, தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தந்தை பெரியார் விருது யாருக்கு என்பது அறிவிக்கப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுட்டுரைப் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது ஜனவரி 9-ஆம் தேதியும், அம்பேத்கர் விருது 10-ஆம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

45 வயதைக் கடந்த பெண் காவலா்களுக்கு இரவு நேரப் பணியில் இருந்து விலக்கு

இந்த நாள் இனிய நாள்!

பாலாற்றில் தோல் கழிவுநீா் கலப்பு விவகாரம் - உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி

ஆட்டோ கவிழ்ந்து சிறுவன் உயிரிழப்பு

பேச்சு தோல்வி: 6-ஆவது நாளாக நீடித்த தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்

SCROLL FOR NEXT