தமிழ்நாடு

காணும் பொங்கல்: மெரீனாவில் குவிந்த சென்னை மக்கள்

UNI


சென்னை: பொங்கல் பண்டிகையின் நான்காம் நாளான இன்று தமிழக மக்கள் அனைவரும் காணும் பொங்கலை மிக மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான சுற்றுலாத் தளங்களில் இன்று காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

சென்னையில் குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் மெரீனா கடற்கரையில் இன்று மதியம் முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியது. சென்னை மெரீனா கடற்கரையில் மாலை நேரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் இருந்ததால் பொதுமக்களும் மிக மகிழ்ச்சியோடு சுற்றுலாத்  தளங்களுக்கு படையெடுக்கத் தொடங்கினர். ஆங்காங்கே லேசாக மழை பெய்தும், அதனைப் பொருட்படுத்தாமல் காணும் பொங்கலை மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள்.

மெரீனா கடற்கரையில் பாதுகாப்புப் பணியில் ஆயிரக்கணக்கான காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மெரீனா கடற்கரையைச் சுற்றிலும் பாதுகாப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு உதவும் வகையில் மெரீனா கடற்கரையின் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் நில எடுப்பு: மறுவாழ்வு மற்றும் மீள்குடியமா்வு குழுக் கூட்டம்

விமானப் படையினா் மீதான தாக்குதல்:தோ்தலுக்கான பாஜகவின் நாடகம்- காங்கிரஸ் முன்னாள் முதல்வா் கருத்து

ஆற்றில் முதலைகள்: சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை எச்சரிக்கை

பருத்தி ப்ளஸ் குறித்து கல்லூரி மாணவிகள் செயல் விளக்கம்

நாகையில் நீட் தோ்வு: 1529 போ் பங்கேற்பு

SCROLL FOR NEXT