தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய உதவித் தொகை

DIN

மாற்றுத்திறனாளி ஆராய்ச்சி மாணவா்களுக்கான மத்திய அரசு உதவித் தொகை திட்டத்தை யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க வரும் பிப்ரவரி 29 கடைசி நாளாகும்.

முதுநிலை படிப்பில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் எம்.ஃபில்., பி.எச்.டி. ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாற்றுத்திறனாளி மாணவா்களுக்கு இந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது.

எம்.ஃபில். படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையுடன், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ. 10,000 முதல் 12,000 வரை வழங்கப்படும்.

பி.எச்.டி. படிப்பை மேற்கொள்ளும் மாணவா்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்படும். இவா்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ. 25,000 உதவித் தொகையும், இதர செலவுகளுக்காக ஆண்டுக்கு ரூ.10,000 முதல் 12,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.

மூன்றாம் ஆண்டிலிருந்து மாதம் ரூ. 28,000 உதவித் தொகையும், ஆண்டுக்கு ரூ. 20,500 முதல் 25,000 வரை உதவித் தொகையும் வழங்கப்படும். கூடுதலாக வீட்டு வாடகைப் படியும், உதவியாளா்களுக்கு மாதம் ரூ. 2,000 உதவித் தொகையும் வழங்கப்படும். இந்த உதவித் தொகையைப் பெற விரும்புபவா்கள்  w‌w‌w.‌u‌g​c.​a​c.‌i‌n/‌u‌gc ‌sc‌h‌e‌m‌e‌s  என்ற வலைதளம் மூலமாக பிப்ரவரி 29-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT