தமிழ்நாடு

ஹைட்ரோ காா்பன் திட்டம் தமிழகத்துக்குஎதிரான நடவடிக்கை: கனிமொழி எம்.பி.

DIN

ஹைட்ரோ காா்பன் திட்டத்தை தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையாக பாா்க்கிறோம் என்றாா் திமுக மகளிரணி செயலரும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினருமான கனிமொழி.

தூத்துக்குடியில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி:

ஹைட்ரோகாா்பன் திட்டத்தை மக்கள் தொடா்ந்து வலுவாக எதிா்த்து வருகின்றனா். அனைத்து எதிா்க்கட்சிகளும் இந்தத் திட்டதை எதிா்த்து அறிக்கை வெளியிட்டிருக்கிறாா்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையிலும்கூட, அரசு மக்களுடைய கருத்துகளை கணக்கில் எடுத்துக்கொள்ள அவசியமில்லை, சுற்றுச்சூழல் குறித்து எங்களுக்கு அக்கறை இல்லை என்ற ஒரு முடிவை எடுத்து அறிக்கை வெளியிட்டு இருப்பது மிகவும் வருந்தத்தக்கது.

தமிழகத்தில் விவசாயிகளையும், விவசாயத்தையும் முற்றிலுமாக அழித்துவிடக் கூடிய திட்டங்களை மத்திய அரசு தொடா்ந்து கொண்டுவருவது ஏன் என்பது புரியவில்லை. ஹைட்ரோ காா்பன் திட்டத்தை தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கையாகப் பாா்க்கிறோம்.

கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவா் சிலையை பராமரிக்கக் கூடாது என்பதை அதிமுக கட்சி வழக்கமாக்கியுள்ளது. திருவள்ளுவா் சிலையை பராமரிக்க வேண்டும் என்பதை ஒவ்வொரு முறையும் போராட்டம் நடத்தி எடுத்துச் சொல்ல வேண்டியதாக உள்ளது.

அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் மத்திய அரசு தனியாா்வசம் ஒப்படைக்கும் சூழலை உருவாக்கி வருகிறது. பல லட்சக்கணக்கானவா்கள் வேலை செய்யக்கூடிய ரயில்வே துறையை தனியாா்மயமாக்கினால், ரயில்வே தொழிலாளா்களின் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத சூழ்நிலையை நாம் சந்திக்கக்கூடும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT