தமிழ்நாடு

நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; ஒரு நடிகர்: மு.க. ஸ்டாலின் பேச்சு

DIN


சென்னை: நண்பர் ரஜினிகாந்த் அரசியல்வாதியல்ல; அவர் ஒரு நடிகர் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக செயற்குழுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் ஸ்டாலின்.

அப்போது அவர் கூறுகையில், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஜனவரி 24ம் தேதி திமுக கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை நடத்தவிருப்பதாக தெரிவித்தார்.

ஜனவரி 24ம் தேதி சென்னையில் திமுக கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெறும், அன்றைய தினம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் ஸ்டாலின் கூறினார்.

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நண்பர் ரஜினி அரசியல்வாதி அல்ல; ஒரு நடிகர். பெரியார் பற்றி நண்பர் ரஜினிகாந்த் சிந்தித்து, யோசித்துப் பேச வேண்டும் என்று பதிலளித்தார்.

முன்னதாக திமுக செயற்குழுக் கூட்டத்தில் தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது  உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT