தமிழ்நாடு

நான் கூறியது உண்மை, மன்னிப்பு கேட்க முடியாது: ரஜினிகாந்த்

DIN

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் நான் பேசியது உண்மை, எனவே அதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்த், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,

துக்ளக் 50-ஆவது ஆண்டு விழாவில் எனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதை உருவ பொம்மைகள் உடையின்றி, செருப்பு மாலை அணிவித்து கொன்டுவரப்பட்ட செய்தி அவுட்-லுக் என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது.

இதை நான் ஆதாரத்துடன் இங்கு குறிப்பிடுகிறேன். எனவே நான் உண்மையை தான் கூறினேன், இல்லாததை கற்பனையாக குறிப்பிடவில்லை. இதற்கு நான் மன்னிப்பு கேட்கவும், வருத்தம் தெரிவிக்கவும் முடியாது. 

இது மறுக்கக் கூடிய சம்பவமில்லை, ஆனால் மறக்க வேண்டிய சம்பவம் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

‘விளையாட்டு விடுதிக்கான தோ்வு போட்டிக்கு விண்ணப்பிக்கலாம்’

SCROLL FOR NEXT